Friday, September 18, 2009

Actress Bhavana Paired with Ajith on Asal


Once Again Ajith join with Asal ajith


Simbu joined with Ajith in ASAL




Ajith's 50th Film was directed byAlagiri's Son Durai Dhayanithi


posted by thinakaran daily paper.

Nayanthara decides to act on malayalam films -after aathavan release


சூர்யாவுடன் ஆதவனில் நடித்து வரும் நயன்தாரா மலையாளத்தில் திலீப்புடன் பாடிகாட் படத்திலும் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் என்று கலக்கி வரும் நயன்தாராவுக்கு சமீப காலமாக மலையாளம் மீது தீராப் பற்று வந்து விட்டதாம். பாடிகாட் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்புதான் இந்த பற்றுக்கு காரணம். சமீபத்தில் ஓணம் பண்டிகையை குடும்பத்துடன் சொந்த ஊரில் கொண்டாடிய அவர் தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டிருக்கிறாராம். விரைவில் புதிய படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Kamalhasan beats pyramid sai meera rao


மர்மயோகி பட விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன் தங்களிடம் வாங்கிய ரூ.10 கோடியே 90 லட்சத்தை வட்டியுடன் சேர்த்து தரக்கோரி நடிகர் கமல்ஹாசனுக்கு பிரமீட் சாய்மீரா அனுப்பிய வக்கீல் நோட்டீசுக்கு கமல்ஹாசன் அதிரடி பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உன்னைப்போல் ஒருவன் பட ரீலிசுக்கு எதிராக வெளியாகியிருக்கும் செய்திகள் தவறானவை. ஓராண்டுக்கும் மேலாக மர்மயோகி படத்துக்காக நான் உழைத்தேன். அந்த காலகட்டத்தில் வேறு எந்த படத்திற்கும் நான் பணியாற்றவில்லை. இதனால் எனக்கு ரூ.40 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. இதுதொடர்பாக கடந்த எப்ரல் மாதம் 12ம்தேதி நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார். எந்த கோர்ட்டும் எங்கள் நிறுவனத்துக்கு தடை விதிக்கவில்லை என்றும் கமல்ஹாசன் கூறியிருக்கிறார

Ameer specialy invites 250 Asst Director for yogi release


தான் நடித்து வெளியாகவிருக்கும் யோகி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு 250 உதவி இயக்குனர்களை அழைத்து அசத்தியிருக்கிறார் டைரக்டர் அமீர். யோகி படத்தின் ஆடியோ வெளீயீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் இன்று நடந்தது. வேறு எந்த விழாவிலும் இல்லாத அளவு இந்த விழாவில் சுமார் 250 உதவி இயக்குனர்கள் கலந்து கொண்டனர். வழக்கமாக வி.ஐ.பி.,க்களுக்கு அளிக்கப்படும் இருக்கைகளில் உதவி இயக்குனர்கள் உற்சாகமாக அமர்ந்திருந்தது பல வி.ஐ.பி.,க்களின் கவனத்தையும் ஈர்த்தது. இதுகுறித்து அமீரிடம் கேட்டால், ஒரு கட்டிடத்துக்கு பில்லர் எவ்வளவு முக்கி‌யமோ... அந்த அளவுக்கு ஒரு படத்தக்கு உதவி இயக்குனர்கள் முக்கியம். அவர்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில் அனைத்து உதவி இயக்குனர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு விடுத்தேன், என்று கூறி புன்னகைக்கிறார். யோகி படத்துக்கு ஏகபோக வரவேற்பு இருப்பதால் அடுத்தும் படத்தில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமீர், கண்டிப்பாக நடிக்க மாட்டேன். நான் அடுத்து இயக்கவுள்ள படம் கண்ணபிரான். ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார். நாயகியை இன்னும் முடிவு செய்யவில்லை, என்றார்.
Kollywood Updates © 2008 Template by:
Kollywood updates