
மர்மயோகிக்காக பிரமிட் சாய்மீராவிடம் வாங்கிய பணத்தை உன்னைப்போல் ஒருவன் படத் தயாரிப்புக்கு பயன்படுத்தவில்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். மர்மயோகி படம் தொடர்பாக பிரமிட் சாய்மீரா நிறுவுனம் கமல்ஹாசன் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள உன்னைப்போல் ஒருவன் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சாய்மீரா கோரிக்கை வைத்துள்ளது. உன்னைப்போல் ஒருவன் ரீலிஸ் ஆகுமா, ஆகாதா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கும் நிலையில், சாய்மீராவின் குற்றச்சாட்டுக்கு கமல்ஹாசன், ஐகோர்ட்டில் பதில் அளித்துள்ளார். வழக்கு விசாரணையின்போது கமல்ஹாசன் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், போதிய நிதி ஆதாரம் இல்லாமல் "மர்மயோகி' படத்தை இணைந்து தயாரிப்பதற்காக பிரமிட் சாய்மீரா நிறுவனம் எங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. "ராஜ்கமல் பிலிம்ஸ்' சார்பில் "மர்மயோகி' படத்துக்கு ஏராளமான பணம் செலவழிக்கப்பட்டது. ஆனால், போதிய பணம் இல்லாத காரணத்தால் படம் கைவிடப்பட்டது. வேறு படங்களில் கவனம் செலுத்தக் கூடாது என்ற நிபந்தனை காரணமாக கமலுக்கு ஓர் ஆண்டு வருமானம் (ரூ.40 கோடி) இழப்பு ஏற்பட்டது. "மர்மயோகி' படத் தயாரிப்புக்காக வழங்கப்பட்ட பணம், அந்தப் படம் ரீலிஸ் ஆகவில்லை என்றாலும் திரும்ப வழங்கப்படும் என்று எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை."மர்மயோகி' படத்துக்காக வழங்கப்பட்ட பணம் "உன்னைப் போல் ஒருவன்' படத் தயாரிப்பில் பயன்படுத்தப் படவில்லை. "பிரமிட் சாய்மீரா' நிறுவனம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment