.jpg)
தான் நடிக்கும் படங்களில் பணியாற்றும் உதவி இயக்குனர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அன்பளிப்பு கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் நடிகர் சூர்யா. பொதுவாக நடிகர்கள் தன்னை வைத்து ஹிட் படம் கொடுக்கும் டைரக்டர்களுக்கு பரிசளிப்பது வழக்கம். எல்லா விஷயத்திலும் வித்தியாசத்தை விரும்பும் சூர்யா, இந்த அன்பளிப்பு விஷயத்திலும் வித்தியாசத்தை கடைபிடிக்கிறார். தான் நடிக்கும் படங்களில் பணியாற்றும் உதவி இயக்குனர்களுக்கு பார்ட்டி வைத்து உற்சாகப்படுத்துவதுடன், தலா ரூ.25 ஆயிரம் அன்பளிப்பு கொடுத்து அசத்துகிறார். இதனால் சூர்யா நடிக்கும் படங்களில் பணியாற்றும் உதவி இயக்குனர்களின் உற்சாகத்துக்கு பஞ்சமில்லையாம்.
0 comments:
Post a Comment