
மர்மயோகி பட விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன் தங்களிடம் வாங்கிய ரூ.10 கோடியே 90 லட்சத்தை வட்டியுடன் சேர்த்து தரக்கோரி நடிகர் கமல்ஹாசனுக்கு பிரமீட் சாய்மீரா அனுப்பிய வக்கீல் நோட்டீசுக்கு கமல்ஹாசன் அதிரடி பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உன்னைப்போல் ஒருவன் பட ரீலிசுக்கு எதிராக வெளியாகியிருக்கும் செய்திகள் தவறானவை. ஓராண்டுக்கும் மேலாக மர்மயோகி படத்துக்காக நான் உழைத்தேன். அந்த காலகட்டத்தில் வேறு எந்த படத்திற்கும் நான் பணியாற்றவில்லை. இதனால் எனக்கு ரூ.40 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. இதுதொடர்பாக கடந்த எப்ரல் மாதம் 12ம்தேதி நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார். எந்த கோர்ட்டும் எங்கள் நிறுவனத்துக்கு தடை விதிக்கவில்லை என்றும் கமல்ஹாசன் கூறியிருக்கிறார
0 comments:
Post a Comment