
சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் டைரக்டர் சரண் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அசல். இப்படத்தின் நாயகன் அஜித். அவருக்கு ஜோடியாக சமீரா ரெட்டி, பாவனா நடிக்கிறார்கள். அசல் படத்தின் முதல் கட்ட சூட்டிங் மலேசியாவில் நடந்தது. தற்போது அடுத்தகட்ட சூட்டிங் பிரான்சில் நடக்கவுள்ளது. இதற்காக அஜித் பிரான்ஸ் செல்கிறார். அங்கு நடக்கும் சூட்டிங்கில் பங்கேற்கும் அஜித், அக்டோபர் 8ம்தேதி சென்னையில் நடைபெறும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அசல் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டிருக்கிறார் டைரக்டர் சரண்.
0 comments:
Post a Comment