
சூர்யாவுடன் ஆதவனில் நடித்து வரும் நயன்தாரா மலையாளத்தில் திலீப்புடன் பாடிகாட் படத்திலும் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம் என்று கலக்கி வரும் நயன்தாராவுக்கு சமீப காலமாக மலையாளம் மீது தீராப் பற்று வந்து விட்டதாம். பாடிகாட் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்புதான் இந்த பற்றுக்கு காரணம். சமீபத்தில் ஓணம் பண்டிகையை குடும்பத்துடன் சொந்த ஊரில் கொண்டாடிய அவர் தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டிருக்கிறாராம். விரைவில் புதிய படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
0 comments:
Post a Comment