
அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். தேர்தல் வரும்போதெல்லாம் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த எதிர்பார்ப்பு ஏற்படும். அதேபோல ரஜினியின் புதிய படம் ரீலிஸின் போதும் படத்தில் தலைவர் ஏதாவது அரசியல் பற்றி பேசியிருக்கிறாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் அதற்கு மாறாக இப்போது ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேசியிருக்கிறார். சமீபத்தில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல், ரஜினிகாந்த் காங்கிரஸில் சேர்ந்தால் வரவேற்போம் என்று பேட்டியளித்தார். ராகுலின் கருத்திற்கு ரஜினியின் பதில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையேயும், அரசியல் பிரமுகர்களிடையேயும் இருந்து வந்தது. இந்நிலையில் அரசியல் பிரவேசம் குறி்த்து ரஜினி அளித்துள்ள பேட்டியில், ராகுலின் அழைப்புக்கு நன்றி தெரிவிச்சுக்கிறேன். அரசியல்ல ஈடுபடும் எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை. அரசியல் வாழ்க்கை பற்றி முடிவெடுத்தால் அதுபற்றி (காங்கிரசில் சேருவது பற்றி) யோசிப்பேன், என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment