
இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கும் யோகி படத்தின் ஆடீயோ வெளியீட்டு விழாவில் பேசிய சேரன், யோகி படத்தை நான் முழுவதுமாக பார்த்து விட்டேன். இங்கே உள்ள நடிகர்கள் வருத்தப்படக் கூடாது. ஒரு சில காட்சியில் எந்த கதாநாயகனும் செய்ய முடியாததை அமீர் செய்து இருக்கிறார் என்று போகிற போக்கில் ஒரு தகவலை கொளுத்திப் போட., அது மேடையில் இருந்த ஜெயம்ரவி, சிம்பு, ஜே.கே.ரித்திஷ் எம்.பி., உள்ளிட்டவர்களை உசுப்பி விட்டுவிடும் என அனைவரும் எதிர்பார்த்தனர். அப்போது பேசுவதற்காக மைக்கை பிடித்த சிம்பு, நல்ல இயக்குனர் கிடைத்தால் நடிப்பது ஈஸி. ஆனால் இயக்குவது, நடிப்பது இரண்டுமே கஷ்டமில்லை.. என்று கூறியதுடன், தன் பங்குக்கு, பருத்திவீரன் படம் முழுக்க நடிகர் கார்த்தி மூலம் இயக்குனர் அமீர்தான் தெரிந்தார். அந்த அளவிற்கு பிறரையே இயக்கத் தெரிந்தவர்... இதில் எப்படியெல்லாம் நடித்திருப்பார்.. என இமேஜின் பண்ண முடிகிறது என மேடையில் இல்லாத நடிகர் கார்த்தியை வம்புக்கு இழுத்து அமர்ந்தார்
0 comments:
Post a Comment