
சீயானாக இருந்த விக்ரம் கந்தசாமிக்கு பிறகு சூப்பர் ஹீரோவாகி விட்டார். மெகா ஹிட் படமான சிவாஜியின் வசூலையே மிஞ்சி விட்டது என்ற பப்ளிசிட்டி ஒருபுறமும், படம் பார்க்க வரும் குழந்தைகளுக்கு சேவல் மாஸ்க் இலவசம் என்ற அறிவிப்பு இன்னொருபுறமும் கந்தசாமியை வளர்த்து வருகிறது. கந்தசாமி வெற்றி பற்றி விக்ரமிடம் கேட்டால், காசி, அந்நியன், பிதாமகன் போன்ற படங்களுக்கு உழைத்தது போலவே இந்த படத்திற்காகவும் உழைத்தேன். என்னுடைய உடல் உழைப்பு வீண் போகவில்லை. கந்தசாமி ஸ்டைலாக வரவேண்டும் என்பதற்காக பல நாட்கள் ஏ.சி. அறை சிறைவாசம் இருந்தேன். படம் நன்றாக வந்திருக்கிறது என்பதுடன் என்னுடைய ரசிகர்கள் இன்னும் எதிர்பார்க்கிறார்கள் என்பதும் புரிகிறது. எனவே இனி 2 வருடத்திற்கு 5 படங்கள் என்று திட்டமிட்டு உழைக்கப் போகிறேன், என்கிறார். நான் எப்பவுமே சீயான்தான் என்று சொல்லும் விக்ரமிற்கு சீயான் என்று கூப்பிட்டால்தான் பிடிக்குமாம்
0 comments:
Post a Comment