
தான் நடித்து வெளியாகவிருக்கும் யோகி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு 250 உதவி இயக்குனர்களை அழைத்து அசத்தியிருக்கிறார் டைரக்டர் அமீர். யோகி படத்தின் ஆடியோ வெளீயீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் இன்று நடந்தது. வேறு எந்த விழாவிலும் இல்லாத அளவு இந்த விழாவில் சுமார் 250 உதவி இயக்குனர்கள் கலந்து கொண்டனர். வழக்கமாக வி.ஐ.பி.,க்களுக்கு அளிக்கப்படும் இருக்கைகளில் உதவி இயக்குனர்கள் உற்சாகமாக அமர்ந்திருந்தது பல வி.ஐ.பி.,க்களின் கவனத்தையும் ஈர்த்தது. இதுகுறித்து அமீரிடம் கேட்டால், ஒரு கட்டிடத்துக்கு பில்லர் எவ்வளவு முக்கியமோ... அந்த அளவுக்கு ஒரு படத்தக்கு உதவி இயக்குனர்கள் முக்கியம். அவர்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில் அனைத்து உதவி இயக்குனர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்து அழைப்பு விடுத்தேன், என்று கூறி புன்னகைக்கிறார். யோகி படத்துக்கு ஏகபோக வரவேற்பு இருப்பதால் அடுத்தும் படத்தில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அமீர், கண்டிப்பாக நடிக்க மாட்டேன். நான் அடுத்து இயக்கவுள்ள படம் கண்ணபிரான். ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார். நாயகியை இன்னும் முடிவு செய்யவில்லை, என்றார்.
0 comments:
Post a Comment