
நடிகை த்ரிஷா ஷாப்பிங் பண்ணுவதில் கூட சூப்பர் ப்ளானை கடைபிடித்து வருகிறார். பேஷன் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு பேஷன் பிடிக்கும். பேஷன் விஷயங்களில் நான் எப்பவுமே அப் டூ டேட்டா இருப்பேன். எனக்கு பிடிச்சது மேற்கத்திய உடைகள்தான். பிடிச்ச ஷாப்பிங் ஸ்பாட் துபாய்தான். எப்படியும் வருஷத்தில் ஒரு தடவையாவது துபாய்ல டூயட் சூட்டிங் இருக்கிறதால, அப்பவே பர்ச்சேஸ் முடிச்சிருவேன். மாடர்ன் டிரஸ்தான் எனக்கு நல்லா இருக்கும்னாலும் கல்யாணம் மாதிரியான விழாக்கள்னா நிச்சயம் சேலைதான் கட்டுவேன். தங்க நகைககள்ல எனக்கு எப்பவுவே பெரிய ஈடுபாடு கிடையாது. என் சின்ன கழுத்துக்கு பெரிய நகைகள் எடுபடாது. மெல்லிய செயின்தான் போட்டுப்பேன், என்று கூறியுள்ளார். (சூட்டிங் ஸ்பாட்டையே ஷாப்பிங் ஸ்பாட்டா ஆக்கிட்டீங்களாக்கும்)
0 comments:
Post a Comment